‘சில்லாக்ஸ்’னா என்ன? விஜய் பட பாட்டுக்கு இப்படி ஒரு அர்த்தமா? சீக்ரெட்டை உடைத்த விஜய் ஆண்டனி

Published : Sep 23, 2024, 01:38 PM IST

Chillax Song Secret : மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் இடம்பெறும் சில்லாக்ஸ் பாடல் வரியில் உள்ள ரகசியத்தை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.

PREV
14
‘சில்லாக்ஸ்’னா என்ன? விஜய் பட பாட்டுக்கு இப்படி ஒரு அர்த்தமா? சீக்ரெட்டை உடைத்த விஜய் ஆண்டனி
chillax Song Secret

தமிழ் திரையுலகில் தற்போது நடிகராக கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவர் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழு நேரமாக நடிப்பில் இறங்கிவிட்டதால் படங்களுக்கு இசையமைப்பதை கைவிட்டுவிட்டார். இருப்பினும் அவரது பாடல்கள் இன்றளவும் வைப் மெட்டீரியலாக உள்ளன.

24
Vijay Antony

அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் கடந்த 2011-ம் ஆண்டு இணைந்து விஜய் ஆண்டனி பணியாற்றிய படம் தான் வேலாயுதம். இப்படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இது அசாத் என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் விஜய் வேலாயுதம் என்கிற சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியின் பாடல்களும் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தன. அதில் மிகவும் பேமஸ் ஆன பாடல் என்றால் அது சில்லாக்ஸ் பாடல் தான். இந்த பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Anchorகளுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் விஜய் டிவி

34
Music Director Vijay Antony

சில்லாக்ஸ் பாடலுக்கு அண்ணாமலை தான் பாடல் வரிகளை எழுதி இருந்தார். அவர் ‘மஞ்சநெத்தி மரத்துக் கட்ட... நாட்டுக்கட்ட டவுனுகட்ட; ரெண்டும் கலந்த செம கட்ட’ என பெப்பியான பாடல் வரிகளை எழுதிக்கொடுத்தாலும் அதில் ஒரு ஈர்க்கும் வார்த்தை தேவை என யோசித்தாராம் விஜய் ஆண்டனி. அந்த சமயத்தில் போனில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அப்செட்டாக இருந்த விஜய் ஆண்டனியை கூல்டவுன் பண்ணும் வகையில் சில்லாக்ஸ் என சொல்லி இருக்கிறார் அந்த பெண்.

44
Velayudham Movie Song Secret

அந்த வார்த்தையை கேட்டதும் விஜய் ஆண்டனிக்கு பிடித்துப்போக, அதற்கு என்ன அர்த்தம் என்று அந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், Chill Out மற்றும் Relax ஆகியவற்றை சேர்த்து நாங்கள் Chillax என சொல்லுவோம் என கூறி இருக்கிறார். இதை பிடித்துக்கொண்ட விஜய் ஆண்டனி, அந்த சில்லாக்ஸ் என்பதையே பாடலின் பெயராக வைத்து தொடங்கி இருக்கிறார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி விஜய் ஆண்டனியின் ஹிட்லிஸ்ட்டிலும் இடம்பிடித்தது.

இதையும் படியுங்கள்... மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை! இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 6 படங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories