பிரியங்கா உடன் மணிமேகலை சண்டை போட்டது டிஆர்பிக்காகவா? புது குண்டை தூக்கிப்போட்ட சரத்

First Published | Sep 23, 2024, 2:41 PM IST

Cook with comali Sarath : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையும் பிரியங்காவும் சண்டையிட்டது பற்றி அந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட சரத் பேசி இருக்கிறார்.

Cook with comali Sarath

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பிக்பாஸ் போல் சண்டைகளுடனும் சர்ச்சைகளுடனும் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், சுஜிதா தனுஷ், பூஜா மற்றும் ஷாலின் சோயா ஆகியோர் முன்னேறி இருக்கின்றனர். இதில் பிரியங்கா, சுஜிதா, இர்பான் ஆகியோர் அரையிறுதியில் வென்று பைனலுக்குள் நுழைந்தனர். பூஜாவும் ஷாலின் சோயாவும் வைல்டு கார்டு சுற்றில் வென்று பைனலுக்கு சென்றனர்.

cook with comali Finalist

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனலை விட அந்நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றின்போது மணிமேகலை, பிரியங்கா இடையே நடந்த மோதல் தான் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அரையிறுதிக்கு முந்தைய வாரம் திவ்யா துரைசாமி எலிமினேட் ஆனபோது பிரியங்கா தான் அவரைப்பற்றி கூற வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு மணிமேகலை நீங்கள் இதுபோன்று அடிக்கடி தொகுப்பாளர்கள் வேலையில் தலையிடுவதாக கூறி அவரை பேச விடாமல் தடுத்திருக்கிறார்.


cook with comali Manimegalai

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே மனக்கசப்புடன் அரையிறுதி சுற்றில் கலந்துகொண்ட மணிமேகலை மற்றும் பிரியங்காவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மணிமேகலை அந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். வெளியேறிய கையோடு, பிரியங்காவின் தலையீடு அதிகம் இருப்பதால் தான் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டு இருந்தார் மணிமேகலை.

இதையும் படியுங்கள்... பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை சினிமாவுக்காக தூக்கியெறிந்த நடிகைகளும்... அவர்களின் ஒரிஜினல் பெயர்களும்!!

Priyanka Deshpande

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியதை அடுத்து, மணிமேகலைக்கு ஆதரவு பெருகியதோடு, பிரியங்காவை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தனர். இதையடுத்து பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து விஜய் டிவி பிரபலங்களான குரேஷி, பூஜா ஆகியோர் பேசியதை அடுத்து அவர்களை செம்பு என கலாய்த்து இருந்தார் மணிமேகலை. இப்படி பிரியங்கா - மணிமேகலை மோதல் விவகாரம் பூதாகரம் ஆகி உள்ள நிலையில் இதுபற்றி குக் வித் கோமாளி சரத் தன் கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

Manimegalai vs Priyanka Deshpande

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி சரத் பேசியதாவது : “ மணிமேகலையும் பிரியங்காவும் சண்டை போட்டது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதுபத்தி வீடியோ போட்டு அவங்க நல்லா சம்பாதிச்சிட்டாங்க. அதை பார்த்து அதுபற்றி பேசிக்கொண்டிருக்கும் நீங்களும் நானும் தான் ஏமாளியா இருக்கோம். அவங்களை பற்றி வீடியோ போட்டு நிறைய பேர் காசு சம்பாதிச்சுட்டு இருக்காங்க. இதப்பத்தி நாம கருத்து சொன்னா நம்மள சொம்புனு சொல்வாங்க.

அவரின் தனிப்பட்ட டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம். மக்கள் நம்மை மறந்துவிடக்கூடாது என்பதற்காக கூட இதுமாதிரி சர்ச்சையை கிளப்பி இருக்கலாம் என்று மணிமேகலையை விமர்சித்து சரத் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு பிரியங்கா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும் மணிமேகலை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காலில் எலும்பு முறிவு.. ரஜினியுடன் சிட்டிங்கிலேயே ரொமான்டிக் பாடலில் நடித்த ஸ்ரீதேவி!

Latest Videos

click me!