கர்நாடக இசை மற்றும் திரையிசை பாடகியான மறைந்த மாமேதை எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு உலக அரங்கத்திலேயே எந்த விதமான அறிமுகமும் தேவையில்லை. கடந்த 1916ம் ஆண்டு மதுரை மாகாணத்தில் பிறந்தவர் அவர். இளம் வயதிலேயே தன்னுடைய தாய் சண்முகவடிவு அவர்களிடம் தான் கர்நாடக இசையை அவர் பயின்றார். கடந்த 1929ம் ஆண்டு அப்போதைய "மெட்ராஸ் மியூசிக் அகாடமியில்" தான் அவரது முதல் அரங்கேற்றம் நடந்தது.
அப்போது அவருக்கு வயது வெறும் 13, கடவுள்களின் பெயரால் பாடப்படும் பஜனைகளை பாடுவதில் வல்லவர் தான் சுப்புலட்சுமி. மிக சிறிய வயதிலேயே லண்டன், நியூயார்க், கனடா மட்டுமல்லாமல் பல மேலை நாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகளை நடத்தியவர். 1963ம் ஆண்டு நடந்த "எடிம்பர்க் இன்டர்நேஷனல் இசை விழா, 1966ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த ஒரு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள "ராயல் ஆல்பர்ட் ஹாலில்" கடந்த 1982ம் ஆண்டு நடந்த இசை கச்சேரி மற்றும் மாஸ்கோவில் 1987ம் ஆண்டு நடந்த ஒரு இசைக் கச்சேரி என்று அவர் குரலில் மின்னிய கச்சேரிகள் ஏறலாம்.