
60 மற்றும் 70-களில் தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ஜெமினி கணேசனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி, அவரின் மூத்த மகள் கமலா செல்வராஜ் கூறியுள்ளதாவது... "என்னுடைய தந்தை ஜெமினி கணேசன், மிகவும் கடினமான உழைப்பாளி. கடவுள் மீது அதீத நம்பிக்கை உள்ளவர். அவருடைய அம்மா மீது எல்லை கடந்த பிரியம் அவருக்கு. ஜெமினி ஸ்டுடியோ எங்கள் உறவினருடையது என்பதால், என் தந்தை காஸ்டிங் இயக்குனராக முதலில் அங்கு பணியாற்றினார். சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, சந்திரபாபு, போன்ற நடிகர்கள் வருங்காலத்தில் சிறந்த நடிகர்களாக வருவார்கள் என கூறி அவர்களை திரைப்படத்தில் நடிக்க தேர்வு செய்தவர் அவர் தான். அவர் நினைத்தது போலவே அனைவருமே மிகப்பெரிய இடத்திற்கு வந்தனர்.
என் தந்தை, மிகவும் அழகாக இருந்தாலும் கூட... அந்த சமயத்தில் அவரை யாரும் நடிக்க சொல்லவில்லை. இதை தொடர்ந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தான், தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி நடிகராக மாறினார். தொடர்ந்து பேசிய அவர், என் தந்தைக்கு காதல் மன்னன் என பெயர் கிடைத்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம் தான். அவர் எப்போதும் தன்னுடைய படங்களில் அசிங்கமான லிப் மூமென்ட், மற்றும் ஆபாசமான தோரணையோடு நடித்தது இல்லை. கண் அசைவால் மற்றும் தொட்டும் தொடாமலும் காதல் காட்சிகளில் நடிப்பவர். மிகவும் கண்ணியமான மனிதர். அவர் எந்த ஒரு பெண் பிள்ளை பின்னாடியும் சென்றதே கிடையாது. ஆனால் அவர் பின்னாடி தான் நிறைய பெண்கள் வந்தார்கள் என்றும், என்னுடைய தந்தைக்கு சாக்கு சாக்காக காதல் கடிதங்கள் வந்தது உண்டு. இளம் பெண்கள் சிலர் எங்க வீட்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டு போக மாட்டேன் என அடம் படிப்பார்கள். என் தந்தையை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுவதாக கூறுவார்கள். எங்க அப்பா அவர்களை சமாதானம் செய்து அவர்களுடைய அட்ரஸ் எல்லாம் கேட்டு வாங்கி, அவங்க அப்பா - அம்மாகிட்ட கொண்டு போயி விட்டுட்டு வருவாங்க.
தங்கலான் உட்பட 6 தமிழ் படமும் அவுட்... ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிந்தி படம் எது தெரியுமா?
சிலர், உங்கள் வீட்டிலேயே ஒரு சமையல் காரியாக என்னை வைத்துக் கொள்ளுங்கள், உங்களை பார்த்துக் கொண்டே வாழ்ந்து விடுவேன் என கூறுவது உண்டு. சிலர் விஷம் குடிப்பேன் என கூட மிரட்டுவார்கள். ஆனால் அவர்கள் அனைவரிடமும் என் தந்தை கண்ணியமாக நடந்து கொண்டார். அவர்களை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுவிட்டு வருவார். அதேபோல் என்னுடைய தந்தை தனக்கு வரும் அனைத்து ரசிகர்களின் கடிதங்களுக்கும் பதில் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார் என கூறினார்.
சாவித்திரி இதே போல், வீட்டுக்கு வந்தபோது ஏன் ஜெமினி கணேசன் அவரை அழைத்து சென்று விடவில்லை என, கமலா செல்வராஜிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்ப... இதற்கு பதில் அளித்த கமலா செல்வராஜ் தன்னுடைய தந்தையை பல விதத்தில் அவர் மிரட்டி பார்த்தும் அவர் எதற்கும் ஒத்துப் போகவில்லை, ஒரு நாள் திடீரென நடு இரவில் ஓடி வந்துவிட்டார். கொட்டும் மழையில் வீட்டுக்கு வந்தபோது யாராக இருந்தாலும் வீட்டை விட்டு உடனே வெளியே அனுப்ப மாட்டார்கள். முன்பு வந்தவர்கள் எல்லாம், யார் என்றே தெரியாதவர்கள். ஆனால் சாவித்திரி தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த காலம் அது. தெரிந்தவர் என்பதால் என்னுடைய அம்மாவும் கதவை திறந்து உள்ளே விட்டார். ஆனால் அந்த சமயத்தில் என் அம்மாவுக்கு தெரியாது, இவர் தன்னுடைய வாழ்க்கையிலும் காலை வைப்பார் என்று.
காலில் எலும்பு முறிவு.. ரஜினியுடன் சிட்டிங்கிலேயே ரொமான்டிக் பாடலில் நடித்த ஸ்ரீதேவி!
சாவித்திரி தான் ஓடி வந்து என் தந்தையின் காலில் விழுந்தார். அந்த சமயத்தில் அவருக்கு நன்றாகவே தெரியும், என் தந்தைக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்று. எனவே தெரிந்து தான் ஒரு குடும்பத்தை கெடுக்க நினைத்தார். ஏன் மற்ற ஆண்களோடு சாவித்திரி பழக வில்லையா?. பல ஆண்கள் இந்த சினிமா ஃபீல்டில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்னுடைய அப்பாவை மட்டும் பிடிக்க காரணம் என்ன? என தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பின்னர் சாவித்ரிக்கு என் தந்தை அடைக்கலம் கொடுத்தது மட்டும் இன்றி, ஓப்பனாகவே என்னுடைய தந்தை சாவித்திரி குறித்த உறவை மறைக்க விரும்பாத என் தந்தை குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகள் அப்பா பெயர் தெரியாத குழந்தைகளாக இருக்க கூடாதது என எண்ணி ஊரறிய திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்தார் என்றும்... அப்படி இருந்தும் மகாநடி படத்தில் தன்னுடைய தந்தையை ஒரு கொலைகாரரை போல் தான் காட்டி இருந்தார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை கமலா செல்வராஜ் கொட்டி இருந்தார்.
மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை! இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 6 படங்கள்!