ஏற்கனவே ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அதற்கான புரோமோ வெளியாகி தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில், மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீது குவிந்திருக்கிறது. மேலும் இந்த எட்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சுமார் 50 கோடி ரூபாய் விஜய் சேதுபதி சம்பளமாக பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.