பாடலாசிரியர் வாலி இவ்வுலகை விட்டு மறைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவர் எழுதிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கிய அவரின் திரையுலக பயணம், விஜய், விஷால் என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலருக்கும் எவர்கிரீன் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் வாலி. அந்த வகையில் ஒரே உவமை கொண்ட பாடல் வரிகளை எம்ஜிஆர் மற்றும் விஷாலுக்கு எழுதி இருக்கிறார் வாலி. அது என்ன பாடல்கள் என்பதை பார்க்கலாம்.
24
Kumari Pennin Ullathile Song
எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’ என்கிற பாடலை வாலி தான் எழுதி இருந்தார். இந்தப் பாடலை டி.எம்.செளந்தரராஜன் மற்றும் பி.சுசிலா ஆகியோர் பாடிய இந்த பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்த பாடலில் ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா... குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்’ என்கிற வரிகளை வாலி எழுதி இருப்பார்.
இந்த பாடல் வரி மூலம் தான் பெண்ணின் மனதில் குடியிருக்க நான் என்ன வாடகை தர வேண்டும் என காதலன் காதலியை பார்த்து பாடுவது போன்ற உவமையை இந்த பாட்டில் பயன்படுத்தி இருப்பார் வாலி. இதே உவமை உடன் கூடிய பாடல் வரியை எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல விஷால் பட பாடலுக்கும் பயன்படுத்தி இருக்கிறார் வாலி. அந்த வரி விஷால் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன வெடி திரைப்பட பாடலில் இடம்பெற்று இருந்தது.
44
Vedi Movie Ichu Ichu Song
வெடி திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இச்சு இச்சு என்கிற பாடல் வைரல் ஹிட் ஆனது. இந்த பாடலில் தான் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே பாடலுக்கு பயன்படுத்திய அதே உவமையை பயன்படுத்தி இருந்தார் வாலி. இப்பாடலில், ‘வாடகை வாடகை என்னடி வாடகை உன் மன வீட்டுக்குள் உட்கார’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். இந்த வரியும் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாடல் வரியும் ஒரே உவமையை கொண்டது. அந்த வரியை பட்டி டிங்கரிங் பார்த்து தான் வெடி படத்தில் வாலி பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.