முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 

அந்த வகையில் குடும்ப கதையை மையமாக வைத்து, சென்டிமென்ட், காதல், காமெடி, என அனைத்து அம்சங்களுடனும் ஒளிபரப்பாகி வருகிறது 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல்.
இந்த சீரியல் குறிப்பாக கடந்த 6 மாதமாக, பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக ஓடி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவருமே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதி செய்வது போல், சீரியல் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இரு குடும்பத்திற்கும் இடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விடுவதுபோல் காட்சிகள் அமைந்துள்ளதால், இந்த சீரியல் விரைவில் முடிவடைய போகிறது.
ரசிகர்களின் மனதை கவர்ந்த, 'சுந்தரி நீயும் சுந்தரி நானும்' சீரியல் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!