புத்தாண்டில் புதுவரவு.... புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால் - குவியும் வாழ்த்துக்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 20, 2021, 07:22 PM ISTUpdated : Dec 20, 2021, 07:26 PM IST

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷ்ணு விஷால் (Vishnu Vishal), டுவிட்டரில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

PREV
16
புத்தாண்டில் புதுவரவு.... புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால் - குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் தனது நடிப்பால் உயர்ந்து தற்போது சில படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். 

26

இவரது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தற்போது மோகன் தாஸ், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களிலும் அவர் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

36

இவருக்கு இந்த ஆண்டு திரைரீதியாக சரியாக அமையவில்லை. இந்த ஆண்டு இவர் நடிப்பில் காடன் படம் மட்டுமே வெளியானது. அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

46

இருந்தபோதும் சொந்த வாழ்க்கையில் இவருக்கு இது மறக்கமுடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர் தனது நீண்ட நாள் காதலியான ஜுவாலா கட்டாவை இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார்.
 

56

இந்நிலையில், அடுத்த ஆண்டும் தனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர் தனது தம்பி ருத்ராவை (Rudra) தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் செய்ய உள்ளார். 

66

மேலும் அவர் நடிக்க உள்ள முதல் படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாக விஷ்ணு விஷால் (Vishnu Vishal) அறிவித்துள்ளார். இதற்காக நல்ல கதை இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு டுவிட்டரில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories