Prabhas New Movie: அடேங்கப்பா... பட பஜெட்டில் பாதியை சம்பளமாக பெரும் பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

Published : Dec 20, 2021, 06:05 PM IST

'பாகுபலி' பட நாயகன் பிரபாஸ் (Bahubali Actor Prabhas) நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள 'Script' படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.  

PREV
16
Prabhas New Movie: அடேங்கப்பா... பட பஜெட்டில் பாதியை சம்பளமாக பெரும் பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள படத்தில், பாகுபலி நாயகன், நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது அவரது 25-வது படமாக உருவாக உள்ளது.

 

26

இந்த படத்தை, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயர் வைத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்தது படக்குழு.

 

36

இவர் ஏற்கனவே ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான 'ஸ்கிரிப்ட்' இதுவரை திரையில் வந்திராத கதைக்களம் கொண்ட படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

46

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து ‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

 

56

இதை தொடர்ந்து, அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 300 கோடி என்றும், இதில் பாதி தொகையை தான் பிரபாஸ் தன்னுடைய சம்பளமாக பெற உள்ளாராம்.

 

66

அதாவது பிரபாஸ், ஸ்கிரிப்ட் படத்திற்காக ரூபாய் 150 கோடி சம்பளம் பெற உள்ளார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

Read more Photos on
click me!

Recommended Stories