Ramya Pandian: அல்ட்ரா மாடர்ன் உடையில்.. மீண்டும் மொட்டை மாடி கவர்ச்சியில் அட்ராசிட்டி செய்த ரம்யா பாண்டியன்!

First Published | Dec 20, 2021, 4:39 PM IST

சமீபத்தில் பில்லா (Billa movie) பட நயன்தாராவை (Nayanthara) போல்... கருப்பு நிற உடையில் சொகுசு கார் முன் நின்று விதவிதமாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் (Ramya Pandian) மீண்டும், அதே அல்ட்ரா மாடர்ன் உடையில், மொட்டை மாடியில் நின்றபடி படு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்... அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் தேர்வு செய்யும் கதைகளும் மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. அந்த வகையில்... சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவன ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Tap to resize

இதை தொடர்ந்து தற்போது தமிழில், 'இடும்பன்காரி' என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக... விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கருப்பு நிற டைட் உடையில்... தாராள கவர்ச்சியில் மீண்டும் மொட்டை மாடியில் நின்றபடி இவர் எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எவ்வளவு கவர்ச்சி உடை அணிந்தாலும், சேலையில் போஸ் கொடுத்தாலும்... எப்போதுமே ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மொட்டை மாடியில் மட்டும் அல்ல... பெட் ரூம்மில் இருந்தபடியும் இப்படி அட்டகாச புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பார்த்தாலே இந்த போட்டோ ஷூட் மூச்சு முட்ட வைக்கிறது.

Latest Videos

click me!