பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் ‘கட்டா குஸ்தி’... காத்துவாங்கும் ‘டிஎஸ்பி’ - 3 நாள் வசூல் நிலவரம் இதோ

First Published | Dec 5, 2022, 12:49 PM IST

டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான கட்டா குஸ்தி மற்றும் டிஎஸ்பி ஆகிய படங்களின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் டிசம்பர் முதல் வாரத்தில் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி மற்றும் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. இதில் கட்டா குஸ்தி படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். அதேபோல் டிஎஸ்பி திரைப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார்.

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். குஸ்தி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருந்தார். விஷ்ணு விஷாலும் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படியுங்கள்.... மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்ற பொன்னியின் செல்வன்... படம் பார்த்து சிலாகித்துபோன மாணவ, மாணவிகள்

Tap to resize

மறுபுறம் டிஎஸ்பி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனுகீர்த்தி நடித்திருந்தார். புகழ், சிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார்.

இந்த இரு படங்களின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கட்டா குஸ்தி திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருவதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் மூன்று நாட்களில் ரூ.13 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7 கோடி வசூலை அள்ளி உள்ளதாம்.

அதேபோல் இப்படத்திற்கு போட்டியாக ரிலீசான டிஎஸ்பி திரைப்படம் முதல் நாளே சுமாரான விமர்சனங்களை பெற்றதால், அது இப்படத்தின் வசூலையும் பாதித்து உள்ளது. இப்படம் மூன்று நாட்களில் ரூ.5 கோடி வசூலை கூட எட்டவில்லை என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்.... பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன் - கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்

Latest Videos

click me!