சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் வெண்ணிலா கபடி குழு. இன்று தமிழ்சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் விஷ்ணு விஷாலுக்கும், சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இதுதான். அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர்களுக்கு நண்பர்களாக நடித்த நடிகர்களையும் எளிதில் மறந்துவிட முடியாது.
அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் தான் ஹரி வைரவன். இவர் குள்ளநரி கூட்டம் படத்திலும் விஷ்ணு விஷால் உடன் சேர்ந்து நடித்திருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் அண்மையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.