விஷாலை சந்திக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்..! தேர்தலில் போட்டியா? அரசியல் களத்தில் பரபரப்பு!

Published : Dec 21, 2022, 05:06 PM IST

நடிகர் விஷால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஷாலை சந்திக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
விஷாலை சந்திக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்..! தேர்தலில் போட்டியா? அரசியல் களத்தில் பரபரப்பு!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'லத்தி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வருகிறார் நடிகர் விஷால். இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நடிகர் விஷாலுக்கு கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே நடிகர் விஷாலை சந்திக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் அணுகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

25

தென்னிந்திய சங்கர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், சட்ட மன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த போது, மனுவில் தவறு உள்ளதாக கூறி, இவருடைய மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். எனவே தன்னை போல் சுயேச்சையாக போட்டியிடும் போட்டியாளருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என ஆக்ரோஷமாக தெரிவித்தார் விஷால் என்பது அனைவரும் அறிந்ததே.

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! தகதகவென மின்னும் உடையில்... தங்கமாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்! போட்டோஸ்.!
 

35

இந்நிலையில், நடிகர் விஷால் ஆந்திர மாநிலத்தில்... சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நடிகர் விஷால் குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்...  அமைந்துள்ள குப்பம் தொகுதியில், சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளதால், அவரை எதிர்த்து மிகவும் வலுவான பொறியாளரை களமிறக்க ஜெயன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் விஷாலுக்கு ஆத்திர மாநிலத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதோடு, அவனுடைய தந்தை அங்கு முக்கிய பிஸ்னஸ் செய்து வருவதால், அடிக்கடி அங்கு விஷால் சென்று வருவதல்ல அங்குள்ள தொழிலாளிகள், மற்றும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. 

45
Vishal

எனவே விஷால் ஆந்திராவில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதனை விஷால் தன்னுடைய சமூக வளைத்தளத்தில் மறுத்தார். தற்போது திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், அரசியல் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என வெளிப்படையாக கூறியிருந்தார்.

Diya Dance Video குடும்ப பார்ட்டியில் சூர்யா - ஜோதிகா மகள் தியா ஆடிய டான்ஸ்..! லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
 

55

ஆனால் அப்போது விஷாலை சந்தித்து பேச வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதால், விஷால் வரும் 2024ம் ஆண்டு ஆந்திராவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இம்மாதம் 27ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி - விஷால் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories