தமிழ் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால். அவர் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது. திரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவர் அடங்காதவன், அசராதவன், பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷாலின் அடுத்த படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட் இன்று வெளியானது. அதன்படி நடிகர் விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை கார்த்தி சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இதன் போஸ்டரில் அருவா, கத்தி, துப்பாக்கி ஆகியவையும் சுற்றி இடம்பெற்றிருக்க நடுவே டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதெஸ்கோப் உள்ளது. இதைப்பார்க்கும் போது இதில் விஷால் டாக்டரா? இல்லை டான் ஆக நடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது.
நடிகர் விஷாலும், இயக்குனர் ஹரியும் இணைந்து பணியாற்ற உள்ள மூன்றாவது படம் இதுவாகும். அவர்கள் இருவரும் இதற்கு முன்னர் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... அதிக சம்பளம் கேட்ட வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பாரதிராஜா - இது எப்ப?