Vimal: விமல் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடத்திற்கு பின் உருவாகிறது! எந்த படம் தெரியுமா?

First Published | Jan 12, 2024, 1:47 PM IST

நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா 'தேசிங்குராஜா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

விஜய் நடித்த  “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா”, சிவகார்த்திக்கேயன் நடித்த  “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் s.எழில்.

குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமெடி.. ஆக்‌ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் “தேசிங்குராஜா”. 

இதையும் படியுங்கள்... Captain Miller Review: தனுஷின் 'கேப்டன் மில்லர்' மாஸ் காட்டியதா? டென்ஷன் ஆக்கியதா.! விமர்சனம்


இப்படம் வெளியாகி 10 வருடம் கழித்து மீண்டும்  “தேசிங்குராஜா” படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில். ‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள். 

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் 6 ஆண்டு காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? அயலான் சூப்பரா... சுமாரா? முழு விமர்சனம் இதோ

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த  பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக  நடிக்கிறார்கள். 

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும்  சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில். இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படத்திலும்  அப்படிதான்… 

ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள். 

இதையும் படியுங்கள்... அயலான் vs கேப்டன் மில்லர்... பொங்கல் ரேஸில் மிரட்டியது யார்? சொதப்பியது யார்? டுவிட்டர் விமர்சனம் இதோ

s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு  ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார். பட பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos

click me!