தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2017-ம் ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டே இயக்குனர் ஏ.எல்.விஜய் மருத்துவம் படித்த பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.