விக்ரமின் 'தங்கலான்' திரையரங்கில் மின்னியதா? விமர்சனம் இதோ!

First Published Aug 15, 2024, 7:59 AM IST

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்த ரசிகர்களின் விமர்சனங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Vikram Comeback from Thangalaan Movie

நடிகர் விக்ரம் நடித்து 2011-ஆம் ஆண்டு வெளியான 'தெய்வத்திருமகள்' படத்திற்கு பின்னர், இவருக்கு தரமான பிரேக் கொடுக்கும்படியான படங்கள் அமையவில்லை. காரணம் இந்த படத்தை தொடர்ந்து வெளியான பிக்பட்ஜெட் படங்களான ஐ, இருமுகன், கோப்ரா, சாமி ஸ்கொயர், போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களையே சந்தித்தித்தது.
 

Ponniyin Selvan Movie

எனினும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மீண்டும் விக்ரமுக்கு வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இப்படத்தில் விக்ரமை தவிர, கார்த்தி, ஜெயம்ரவி, போன்ற பல நடிகர்கள் நடித்ததால்... தனி ஹீரோவாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் விக்ரம். 

சந்தீப் கிஷன் ஓட்டலில்... காலாவதியான அரிசி, தேங்கி கிடந்த நீர்! சோதனைக்கு பின்னர் நடிகர் கொடுத்த விளக்கம்!
 

Latest Videos


Vikram Dedication:

இந்நிலையில் விக்ரம் ஐ படத்திற்கு பின்னர் தன்னுடைய உடலை அதிகம் வருத்தி கொண்டு, பல்வேறு சவால்களையும், காயம், ரத்தம், போன்றவற்றை தாங்கி கொண்டு விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் 'தங்கலான்'. இந்த படத்தை, அட்டகத்தி திரைப்பதின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கி, பின்னர் கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி, போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கி உள்ளார்.
 

Real KGF is Thangalaan

பிரிட்டிஸ்காரர்களால் தங்கம் எடுக்க அடிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் பற்றி தான் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். இந்த படத்தில் நடிகர் பார்வதி திருவோத்து 3குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதை தவிர்க்கும் பார்வதி, இந்த படத்திற்காக பல காட்சிகளில் ஜாக்கெட் போடாமல் நடித்துள்ளார். அதே போல் நடிகை மாளவிகா மோகனனும் சூனியக்காரி அவந்திகா என்கிற தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே. இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துக்கொண்டுள்ளார். இந்த படத்தை சுமார் 100 முதல் 150 கோடி செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீவிரமடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணிகள் ! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Thangalaan Review

சுதந்திர தினத்தை முன்னிட்டி வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? என்பது குறித்து ரசிகர்கள் கூறிய விமர்சனங்களை பார்க்கலாம்.

தங்கலான் முதல் பாதி புல்லரிக்க வைப்பதாகவும், சீயான் விக்ரம் நடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் அருமை. பா.ரஞ்சித் தரமான படத்தை இயக்கி உள்ளார் என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

Thangalaan Review

தங்கலான் முதல் பாகம் மிரட்டல், ஹாலிவுட் தரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் நடிகர் விக்ரமும் தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்தியுள்ளார் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

தங்கலான்: விடுதலை நாளில் வெளியீடு உறுதியா?
 

Thangalaan Expected Review

பிரபல திரைப்பட விமர்சகரான கிறிஸ்டோபர் கனகராஜ், நேற்று முதல் கொண்டே தங்கலான் படத்தின் மீதான தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய நிலையில் 'தங்கலான் - மங்கலான்' என ஒரே வார்த்தையில் விமர்சித்து, மன்னித்து விடுங்க சீயான் என கூறியுள்ளார். எனவே இப்படம் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெரும் என தெரிகிறது.

click me!