நடிகை ஜான்வி கபூர், எத்தனை கோடி கொடுத்தாலும்... ஆஸ்கர் விருதே கொடுத்தாலும் தன்னுடைய முடியை மட்டும் வெட்டவோ, அல்லது மொட்டை அடித்து நடிக்கவோ மாட்டேன் என கூறியுள்ளார். இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோலிவுட் திரை உலகின் 'மயில்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட, நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்துடன், பாலிவுட் திரை உலகில் வாரிசு நடிகையாக, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியவர் ஜான்வி கபூர். இதமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, இந்தப் படத்தின் கதையை தன்னுடைய மகளுக்காக தேர்வு செய்தவர் நடிகை ஸ்ரீதேவி தான். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வெளிநாட்டில் நடந்த தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, பாத்ரூமில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
26
Janhvi Kapoor Choosy Roles:
ஸ்ரீதேவியின் இறப்பு, திரையுலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய அம்மா அளவுக்கு நடிப்பிலும், நடனத்திலும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என்றாலும் கூட, எந்த ஒரு நிலையிலும் அம்மா பெயரை கெடுத்து விடக் கூடாது என்பதில் ஜான்வி கபூர் மிகவும் கவனமாக இருக்கிறார்.
மேலும் இவர் அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்து வரும் படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகின்றன. குறிப்பாக 'குஞ்சன் சக்சேனா' தி கார்கில் கேர்ள், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற படங்களுக்காக ஜான்வி கபூரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இந்த ஆண்டு மட்டும் இவரின் கைவசம் மூன்று பாலிவுட் படங்கள் மற்றும் ஜூனியர் என் டி ஆர்-க்கு ஜோடியாக 'தேவாரா' படத்திலும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
46
Janhvi Kapoor Never Cut Hair:
இந்நிலையில், இவரிடம் சினிமாவில் நீங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக, எதை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, அவர் தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்யமாட்டேன் என தீர்க்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஜான்வி, ''இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு மெனெக்கெட்டதன் பலனாக, எனது தோள்பட்டை இறங்கி இருக்கிறது. எலும்புகள் உடைந்துள்ளன. கை கால்களில் கீறி ரத்தம் கொட்டி இருக்கிறது. அவ்வளவு கடின உழைப்பை அளித்திருகிரேன்.
ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என்றால் அது மொட்டை அடிப்பது தான். அந்தக் கதாபாத்திரத்தினால் எனக்கு ஆஸ்கார் போன்ற சிறந்த விருதுகள் கிடைக்கும் என்று கூறினால் கூட, மொட்டை மட்டும் அடிக்கவே மாட்டேன். தலைமுடியில் கைவைப்பதை மட்டும் அனுமதிக்கவே மாட்டேன். என்னுடைய நீளமான தலைமுடிக்காக என் அம்மா (ஸ்ரீதேவி) அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார்.
66
Sridevi Care
நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார். அவருக்கு என்னுடைய தலைமுடி பற்றி மிகுந்த பெருமை இருந்தது. என்னுடைய முதல் படத்திற்காக தலைமுடியை சிறிது வெட்டியபோது அம்மா என் மீது கோபப்பட்டார். எந்த சூழலிலும் தலைமுடியை வெட்டக்கூடாது என்று கூறி இருக்கிறார். அதனால் தலைமுடி மீது மட்டும் கை வைக்க மாட்டேன்' என்று கூறி இருக்கிறார் ஜான்வி கபூர்.