ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்... தங்கலான் விக்ரம் கொடுத்த தரமான ஹிட் படங்கள் இதோ

First Published | Aug 14, 2024, 5:51 PM IST

விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு முன் அவர் நடித்து ஹிட்டான தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Top 5 hit movies of Vikram

தமிழ் சினிமாவில் நடிப்புனு வந்துட்டா இவரை மிஞ்ச ஆள் இல்லை என கூறும் அளவுக்கு படத்துக்காக எந்தவித ரிஸ்க்கும் எடுக்கும் நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விக்ரம். அவர் லேட்டஸ்டாக ரிஸ்க் எடுத்து நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த டாப் 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை பார்க்கலாம்.

Anniyan

அந்நியன்

நடிகர் விக்ரமின் கெரியரில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்று தான் அந்நியன். இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரெமோ, அம்பி, அந்நியன் என மூன்று விதமான மாடுலேஷன்களில் நடித்து பிரம்மிப்பில் ஆழ்த்தினார் விக்ரம். ஷங்கர் இயக்கிய இப்படம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.82 கோடி வசூலித்தது.

Tap to resize

Pithamagan

பிதாமகன்

நடிகர் விக்ரமின் கெரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது பிதாமகன் தான். இப்படத்தில் நடிகர் விக்ரம் சித்தனாக நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் விக்ரம். அவர் வாங்கிய முதல் தேசிய விருது இதுவாகும்.

இதையும் படியுங்கள்... தங்கலான்: விடுதலை நாளில் வெளியீடு உறுதியா?

Sethu Movie

சேது

நடிகர் விக்ரமிற்கு அடையாளத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது சேது தான். பாலா இயக்கிய முதல் படமான இதில் சியானாக நடித்திருந்தார் விக்ரம். இப்படத்தில் கிளைமாக்ஸில் அவர் பைத்தியமாக நடித்திருந்ததை பார்த்து கண்ணீர் சிந்தாத ஆளே இருக்க முடியாது அந்த அளவுக்கு இயல்பாக நடித்து அசத்தி இருந்தார் விக்ரம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Saamy

சாமி

ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் சாமி. இப்படம் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.48 கோடியை வசூலித்து மாஸ் வெற்றியை ருசித்தது.

Dhool

தூள்

நடிகர் விக்ரமுக்கு கமர்ஷியல் ரீதியாக ஹிட் கொடுத்த மற்றொரு படம் தூள். இப்படத்தை தரணி இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தார். இப்படத்தில் கிராமத்து இளைஞனாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்து அசத்தி இருந்தார் விக்ரம். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... தனுஷ், சிவகார்த்திகேயனை விட கம்மி... தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

Latest Videos

click me!