தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!

Published : Aug 14, 2024, 03:15 PM ISTUpdated : Aug 14, 2024, 03:16 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'ரகு தாத்தா' திரைப்படம் நாளை வெளியாகிறது. 1980-களின் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். 'மகாநடி' படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷின் இந்த படம் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

PREV
15
தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!
keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'. இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 1980-களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், 'மகாநடி' பாத்திற்கு பின்னர் தன்னுடைய நடை, உடை, பாவனை போன்றவற்றை மாற்றி கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார்.

25
keerthy suresh

கீர்த்தி சுரேஷை தவிர இந்த படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி ரவீந்திரா விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், ராஜீவ் ரவீந்திரநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி திணிப்பை எதிர்க்கும் விதத்தில்... ஆழமான கருத்தை கூட, கொஞ்சம் காமெடி உணர்வுடன் கூறியுள்ளது.

ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?

35
keerthy suresh

தங்கலான், மற்றும் டிமாண்டி காலனி என்ற இரண்டு பெரிய படங்களுடன் மோத உள்ள இந்த படத்தில்... இருந்து இதுவரை வெளியான டீசர், ட்ரைலர் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் டிமான்டி காலனி படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் இந்த படத்தையும் வெளியிட உள்ளது.

45
keerthy suresh

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம், கீர்த்தி சுரேஷ் 'மகாநடி' படத்தில் நடித்த போது ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. படக்குழுவின் இப்படத்தின் புரோமோஷனில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

திரையுலகின் இருண்ட பக்கம்: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொண்ட 5 நடிகைகள்!

55
keerthy suresh

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ்... தலையில் வெள்ளை நிற ரிப்பானுடன் , கையில் பூ வைத்து கொண்டு எளிமையான சேலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் வசீகரிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories