ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?

First Published | Aug 14, 2024, 2:05 PM IST

தமிழ் சினிமாவில் தனது 16 வயதில் அறிமுகமாகி பின்னர் அரசியலில் சாதனை படைத்த ஜெயலலிதாவின் முதல் பட அனுபவம் பற்றிய சுவாரஸ்ய தகவலை இப்பதிவில் காணலாம். 'வெண்ணிற ஆடை' படத்தில் நடித்தபோது ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அனுபவம் என்ன என்பதை பார்ப்போம்.

Jayalalithaa Movies

தமிழ் சினிமாவில் தன்னுடைய 16 வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் ஜெயலலிதா. 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயலலிதா, புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் அப்போதைய முன்னணி நடிகர்களாக இருந்த சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன், நாகேஸ்வர ராவ், போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
 

Jayalalithaa Enter in Political:

தன்னுடைய திறமையான நடிப்பாலும், அழகாலும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஜெயலலிதா பின்னாளில் ஈடு இணையற்ற அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். அதன்படி 1982 ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற அதிமுக விழாவில், கட்சியில் இணைந்த ஜெயலலிதாவுக்கு அப்போதே கொள்கை பரப்பு செயலாளர் என்கிற பதவி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற ஜெயலலிதா, தன்னுடைய ஆங்கில புலமையால் இந்திராகாந்திகையே வியக்க வைத்த பெருமைக்குரியவர்.

திரையுலகின் இருண்ட பக்கம்: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொண்ட 5 நடிகைகள்!
 

Tap to resize

Jayalalithaa Success in Political

எம்ஜிஆர்-யின் மறைவுக்கு பின்னர், அதிமுக கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் இருந்த நிலையில்... ஜெயலலிதாவை ஒரு மனதாக அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். தன்னுடைய கட்டுக்கோப்பான நடவடிக்கையாலும், அரசியல் வியூகத்தாலும் தன்னை தடுத்த அந்நிய சக்திகளை தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு அம்மாவாக மாறினார் ஜெயலலிதா.
 

Jayalalithaa Shocking Death

இவர் துவங்கிய பல திட்டங்களால் ஏழை மக்கள் பயனடைந்தனர்.  இதுவரை சுமார் ஆறு முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய ஜெயலலிதா பற்றி பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான சித்ராலயா கோபு... கூறிய சுவாரஸ்ய தகவலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பட வாய்ப்பு கிடைக்காததால்... சீரியலுக்கு வந்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம்! எந்த தொடரில் நடிக்கிறார் தெரியுமா?
 

Jayalalithaa First Movie Vennira Aadai

அதாவது ஜெயலலிதா 1965-ம் ஆண்டு,  ஏப்ரல் 14-ந் தேதி அன்று ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெயலலிதா அறிமுகமான 'வெண்ணிற ஆடை' திரைப்படம் வெளியாகியுள்ளது. வென்னிற ஆடை நிர்மலா, வெண்ணிற  ஆடை மூர்த்தி ஆகியோர் இந்த படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், ஏற்கனவே அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வெளியான சமயத்தில் சென்சார் அதிகாரிகள் நடிகர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். 
 

Jayalalithaa Not Allow to Watch movie

ஆனால் வெண்ணிற  ஆடை படத்தில் கவர்ச்சியான காட்சிகள் சற்று அதிகமாக இருந்ததாலும்,  இந்த படத்தில் ஜெயலலிதா ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அதிகமாக அணிந்ததாலும் , அருவியில் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றதால்,  இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்க்க முடியாத  சூழல் இருந்தது.  இந்த நிலையில்,  அப்போது 17 வயதே ஆகியிருந்த ஜெயலலிதா ஆசையாக தான் நடித்த முதல் படத்தை பார்க்க வந்த நிலையில், தியேட்டரில் படம் பார்க்க அனுமதிக்க முடியாது என்று தியேட்டர் நிர்வாகங்கள் மறுத்து அவரை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார் சித்ராலயா கோபு .  

விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின் நான் தாங்க... அடித்து கூறிய நடிகை! புன்னகையோடு Yes சொன்ன தளபதி!
 

Latest Videos

click me!