ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு, மீடு என்கிற ஹேஷ்டேக் மூலம், பல நடிகைகள் தங்களின் கருப்பு பக்கத்தை பற்றி வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை கடந்து, தங்களுடைய திறமையால் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தாலும், ஒரு சில நடிகைகள் இந்த பிரச்சனையை நமக்கு வேண்டாம் என,சினிமாவை விட்டு ஒதுங்கி சீரியலில் கவனம் செலுத்த துவங்கி விடுகின்றனர். தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசிய 5 நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Jeevitha
தற்போது சீரியல்களில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை ஜீவிதா, பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். மேலும் இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி, பிரியா பவானி சங்கர், சாயிஷா, ஆகியோர் நடிப்பில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் கார்த்தியின் சகோதரிகளில் ஒருவராக நடித்திருந்தார். 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற சீரியலில் நடிக்க துவங்கிய ஜீவிதா சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'அருவி' என்கிற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடர் முடிந்த பின்பு, தற்போது டிஆர்பிஎல் கெத்து காட்டி வரும் புதிய சீரியலான 'மருமகள்' தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டிய நிலையில், அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டதால், தனக்கு திரைப்பட வாய்ப்பே வேண்டாம் என ஒரே அடியாக சீரியல் பக்கம் செட்டில் ஆனார்.
நஸ்ரியா முதல் நித்யா மேனன் வரை.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறிய நடிகைகள்..
Samyutha
இவரை தொடர்ந்து கடந்த ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் விஷ்ணு காந்தை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்து ஒரே மாதத்தில் பிரிவதாக அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை சம்யுக்தாவும் இதே போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்து வருவதாக அண்மையில் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'முத்தழகு' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார். மேலும் ஒரு சில வெப் சீரிஸ் களிலும் இதற்கு முன்னர் நடித்துள்ளார். ஏற்கனவே சில காதல் சர்ச்சைகளில் சிக்கிய சம்யுக்தா, திருமண வாழ்க்கையிலும் பல அடிகளை பட்ட பின்னர்... இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், ஆனால் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்கிற எழுதப்படாத நிபந்தனையை ஒன்றை சிலர் இவர் முன் வைக்க தனக்கு சீரியலே போதும் என முடிவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Varalaxmi
சரி புதிதாக திரையுலகில் நுழையும் சில நடிகைகளுக்கு தான் இந்த பிரச்சனை இருக்கிறது என்று பார்த்தால், மிகப்பெரிய சினிமா பின்னணியுடன் திரையுலகில் நுழையும் சில நடிகைகளுக்கும் இதே நிலைதான் என்பது நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின்னர் இவருடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் குணச்சித்திர வேடத்தில் இறங்கி கலக்கத் தொடங்கினார். தற்போது தென்னிந்திய திரையுலகில் வெயிட்டான வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி கடந்த மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரிடமும் சிலர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் வென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட வாய்ப்பு கிடைக்காததால்... சீரியலுக்கு வந்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம்! எந்த தொடரில் நடிக்கிறார் தெரியுமா?
Tharani
அதேபோல் பிரபல நடிகை தாரணியும் இதைப் போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்துள்ளதாக, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தாரணி வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர். இவர் இளம் வயதில் இருக்கும்போது சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்போது அந்த வாய்ப்பு வேண்டுமானால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறியதை தொடர்ந்து, தனக்கு சினிமாவை வேண்டாம் என ஒதுங்கி... சீரியலில் நுழைந்து தன்னுடைய திறமையை தற்போது வரை வெளிக்காட்டி வருகிறார் தாரணி.
Regina
அதேபோல் தற்போது இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரெஜினா கசன்ராவும் தன்னுடைய வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். திரையுலகில் நுழைந்த புதிதில், துணை இயக்குனர் ஒருவர் போன் செய்து திரைப்பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்போது அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்னவென்று தெரியாத ரெஜினா, சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என நினைத்த நிலையில்... பின்னரே உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த பட வாய்ப்பை நிராகரித்து விறாராம். இது மட்டும் இன்றி தன்னுடைய கல்லூரி காலங்களிலும், யார் என்றே தெரியாத ஒருவர் ரெஜினா முன் வந்து நின்று அவருடைய உதட்டை பிடித்து மோசமாக நடந்து கொண்டார் என தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.