
சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதுண்டு. முன்னணி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை தாண்டி அவர்கள் அணியும் ஆடை, அவர்கள் வைத்திருக்கும் சொகுசு கார்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதுமட்டுமின்றி நடிகர்களின் சொத்து மதிப்பு பற்றியும் அதிகம் இணையத்தில் தேடப்படுவதுண்டு. அந்த வகையில் இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்கார நடிகர்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்.
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் தான் பணக்கார நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.6300 கோடி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான், பதான், டங்கி ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதைத்தொடர்ந்து கிங் என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஷாருக்கான்.
சல்மான் கான்
ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் நடிகர் என்றால் அது சல்மான் கான் தான். அவரது சொத்து மதிப்பு ரூ.2900 கோடி. அவர் நடிப்பில் தற்போது சிக்கந்தர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
அக்ஷய் குமார்
பணக்கார் நடிகர்கள் லிஸ்ட்டில் மூன்றாம் இடம் பிடித்திருப்பவர் அக்ஷய் குமார். அவரது சொத்து மதிப்பு ரூ.2500 கோடியாம். அண்மையில் சூர்யா தயாரிப்பில் அவர் நடித்த சர்பிரா திரைப்படம் வெளியானது. இது தமிழில் சுதா கொங்கரா இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
அமீர்கான்
டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளவர் நடிகர் அமீர்கான். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1862 கோடியாம். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அமீர்கான் கைப்பற்றினார். அப்படத்தில் அவரே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தளபதி விஜய்
பணக்கார நடிகர்கள் லிஸ்ட்டில் டாப் 5-ல் இடம்பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். அவரது ரூ.474 கோடி நிகர சொத்து மதிப்போடு 5வது இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?
ரஜினிகாந்த்
விஜய்க்கு அடுத்த படியாக ரூ.430 கோடி சொத்துக்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன், கூலி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.350 கோடி சொத்துக்களுடன் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 7ம் இடம் பிடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
பிரபாஸ்
பாகுபலி என்கிற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரபாஸ். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.241 கோடி இருக்குமாம். அவர் இந்த பட்டியலில் 8ம் இடம் பிடித்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ராஜாசாப், கல்கி 2 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
அஜித்குமார்
பணக்கார நடிகர்கள் பட்டியலில் நடிகர் அஜித்குமார் 9வது இடத்தில் இருக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.196 கோடி இருக்குமாம். அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன்
இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட்டில் கமல்ஹாசன் 10வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி இருக்குமாம். அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
இதையும் படியுங்கள்... Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?