aishwarya arjun
1981-ம் ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் அர்ஜுன். கன்னடத்தில் சில படங்களில் நடித்த அவர் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அவர் நடித்து வந்தார். தமிழில் அவருக்கு பிரேக் த்ரூவாக அமைந்த படம் என்றால் அது சங்கர் குரு. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் அர்ஜுன் நடித்தார்.
aishwarya arjun
ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். செங்கோட்டை, ஜெண்டில் மேன், கர்ணா, சேவகன், ஜெயஹிந்த், முதல்வன், கிரி, ஏழுமலை என பல ஹிட் படங்களில் நடித்தார்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் உச்சத்தில் இருந்த போதே தனி ரசிக பட்டாளத்தை வைத்திருந்தார்.
Arjun Sarja, Aishwarya Sarja,
அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா பின்னர் சில படங்களில் நடித்தார்.
Arjun Sarja, Aishwarya Sarja,
இந்த சூழலில் தனது மகள் திருமணத்திற்கு பின், தனது சம்மந்தி தம்பி ராமையாவின் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டார். திருமயம் அருகே உள்ள திருவேட்டை அழகர் சாமி கோயிலில் அர்ஜுன் - தம்பி ராமையாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். அப்போது அர்ஜுன் , தம்பி ராமையா இருவருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.