
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கிய முதல் சீசனில் இருந்து, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமலஹாசன் தான். ஆனால் அதிரடியாக சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய பணிகள் காரணமாக வெளியேறுவதாகவும் அறிக்கை வெளியிட்டு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து விஜய் டிவி தரப்பில் இருந்தும் கமலஹாசன் விலகுவதை உறுதி செய்தனர். கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிய பின்னர், அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சரத்குமார், விஜய் சேதுபதி, நயன்தாரா, அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியுடன், கமலஹாசன் 'விக்ரம்' படத்தில் நடத்ததன் மூலம் மிகவும் நெருக்கமானவர் என்பதால், பிக்பாஸ் குறித்த சில அறிவுரைகளையும் விஜய் சேதுபதிக்கு வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள். எனவே இந்த முறையும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட மூன்று பேர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் 7 நிகழ்சியில் டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலர் என கூறப்படும் அருண், பட வாய்ப்புக்காக சில வருடங்களாகவே போராடி வரும் நிலையில், இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்க சிபாரிசு செய்துள்ளதாகவும், அர்ச்சனா அருணுக்கு பல அட்வைஸுகளை கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த முறை அருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!
இவரைத் தொடர்ந்து ஃபரீனா பிக்பாஸ் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 'பாரதி கண்ணம்மா' போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்துள்ளார். அதேபோல் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியிலும், கோமாளியாக வந்து கலக்கினார். தற்போது தன்னுடைய உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஃபரீனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் இப்படி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா இந்த முறை, தன்னுடைய காதலர் டிடிஎஃப் வாசனுடன் இணைந்து பிக் பாஸ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஏற்கனவே குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின், அதன் மூலம் சில பட வாய்ப்புகளை கைப்பற்றிய நிலையில், இவர் நடித்த 'செம்பி' படத்திற்கு பின்னர் பெரிதாக எந்த படமும் இவருக்கு கை கொடுக்காததால் தற்போது அஸ்வின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுக்கும், ஷிவாங்கிக்கும் , இடையே இருந்த காம்போ அதிகம் பேசப்பட்டதால் ஷிவாங்கியையும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் களம் இறக்க முடிவு செய்து அவரையும் விஜய் டிவி தரப்பு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் இருந்து, சில தொகுப்பாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறங்குவது தொடர்கதையாக உள்ளதால், பிரியங்கா, அர்ச்சனா, போன்ற தொகுப்பாளர்களை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த முறை மாகாபா செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கலக்கப்போவது யாரு காமெடியன் ராமரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்.
'காத்து மேல' பாடல் மூலம் அதிகம் கவனம் ஈர்த்த கானா பாடகர் பால் டப்பா இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகவும், இவரை தொடர்ந்து சுசி லீக்ஸ் சர்ச்சை ராணி சுசியின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம். அதே போல் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் விதவிதமான விடியோக்களை வெளியிட்டு வரும் அமலா ஷாஜியின் பெயரும் பிக்பாஸ் பட்டியலில் அடிபடுகிறது. இவர்களை தவிர சில மாடல்கள், திருநங்கை பிரபலங்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர், இலங்கை பிரபலங்கள், ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகின் இருண்ட பக்கம்: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொண்ட 5 நடிகைகள்!