பிரபல தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் நடத்தி வரும் உணவகத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில்... காலாவதியான அரிசி மற்றும் சுகாதாரமற்ற முறையில் தேங்கி கிடந்த நீர் குறித்து வெளியான தகவலைத் தொடர்ந்து, நடிகர் சந்தீப் கிஷன் தன்னுடைய விளக்கத்தை அளித்திருந்தார். அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகர் சந்தீப் கிஷன், பிறந்து வளர்ந்தது சென்னையில் என்றாலும் ஒரு நடிகராக அறிமுகமானது தெலுங்கு திரையுலகில் தான். பின்னர் 2013 ஆம் ஆண்டு 'யாருடா மகேஷ்' என்கிற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால், பல வருடங்கள் கழித்து 'மாநகரம்' படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகராக மாறிய சந்தீப் கிஷன் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபர, கேப்டன் மில்லர், போன்ற படங்களில் நடித்திருந்தார்.
26
Raayan Movie Actor Sundeep Kishan
குறிப்பாக சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படமான 'ராயன்' படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் என்பதை தாண்டி, விவாஹா போஜனம்பு என்கிற உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த ஜூலை மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தீப் கிஷனின் உணவகத்தில் இருந்து காலாவதியான அரிசி 25 கிலோ, மற்றும் சுகாதாரமற்ற முறையில் தேங்கி இருந்த நீர் போன்றவை இருந்தன. அதே போல் திறந்து கிடந்த சில உணவு பொருட்கள் மற்றும் நிறமூட்டப்பட்ட தேங்காய் துருவல் போன்றவை இருந்ததாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
46
Sundeep Kishan Clarify Raid
இந்த சர்ச்சைக்குறித்து சந்தீப் கிஷன் பேசியபோது... தான் நடத்தி வரும் விவாஹா போஜனம்பு மொத்தம் ஏழு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50 உணவு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு மட்டும் 350 பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நான் நன்கொடையாக வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் காலாவதியான அரிசியை பயன்படுத்த வேண்டும் என கூறி... எப்போதும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவை தான் கொடுக்கிறோம்.
காலாவதியான அரிசி தேவையில்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள், அது பயன்பாட்டுக்கு வைத்திருந்தது இல்லை என்பதை தெளிவு படுத்திய சந்தீப் கிஷன் தண்ணீர் வடிகாலை தான்.. தண்ணீர் தேங்கி கிடந்ததாக தவறாக புரிந்து கொல்லப்பட்டதாகவும், தன்னுடைய உணவகத்தில் உணவுகள் திறந்து கிடந்ததாக பரவும் புகைப்படங்கள் போலியானவை என விளக்கம் கொடுத்திருந்தார்.
66
Sundeep Kishan
இந்த உணவு பாதுகாப்பு துறையின், சோதனைக்கு பின்னரும் எங்கள் உணவகத்தில் எந்த ஒரு அச்சமும் இன்றி வாடிக்கையாளர்கள் நம்பி சாப்பிடுகிறார்கள் என்றால், அதற்க்கு காரணம் எங்கள் உணவின் தரம் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பதையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.