நன்றி மறந்தாரா விக்ரம்? இயக்குனர் பாலா உடன் சீயானுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை

First Published | Dec 19, 2024, 9:48 AM IST

Vikram vs Bala : இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவில் நடிகர் விக்ரம் பங்கேற்காததன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Director Bala, VIkram

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாலா, கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் விக்ரம் நடித்திருந்தாலும் சேது படம் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் சீயானாக நடித்ததால் தான் அவருக்கு சீயான் விக்ரம் என்கிற பெயரும் கிடைத்தது.

Pithamagan Movie Still

இதையடுத்து விக்ரமை வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார் பாலா. அப்படம் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் விக்ரம் தன்னுடைய கெரியரில் ஒரே ஒரு தேசிய விருதை வென்றுள்ளார். அது பிதாமகன் படத்துக்காக தான் கிடைத்தது. இப்படி விக்ரம் எனும் நடிப்பு அரக்கனை வெளியில் கொண்டு வந்த பெருமை இயக்குனர் பாலாவையே சேரும். பிதாமகன் படத்துக்கு பின்னர் பாலாவும் விக்ரமும் இணைந்து பணியாற்றவே இல்லை.

இதையும் படியுங்கள்... சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!

Tap to resize

Varma Movie Bala

இருப்பினும் பாலா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த விக்ரம் கடந்த 2018-ம் ஆண்டு தன் மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவெடுத்தபோது. அவரும் தன்னைப்போல் பாலா இயக்கத்தில் தான் ஹீரோவாக வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார். இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க ஓகே சொன்ன பாலா, வர்மா என்கிற படத்தை எடுத்தார். இது தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.

Vikram Clash with Bala

பாலா மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த விக்ரம், துருவ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வர்மா படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் ஒரு நாள் அப்படத்தை தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார். படம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் இப்படத்தை வெளியிடும் முடிவை கைவிட்டு, படத்தை டிராப் செய்தனர். 

vikram vs Bala

சரி விக்ரமுக்கு பாலா மீது என்ன கோபம் என்பது பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி வர்மா படத்தை பாலா எடுக்கும் போது விக்ரம் ஒரு முறை கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததில்லை. அந்த அளாவுக்கு பாலா மீது நம்பிக்கை வைத்திருந்தாராம். ஆனால் படம் முடித்து ப்ரிவ்யூ பார்க்கும் போது விக்ரமுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் பாதியிலேயே கிளம்பி சென்றுவிட்டாராம். இதையடுத்து அவருக்கு போன் போட்ட பாலா பாதியிலேயே எழுந்து சென்று என்னை அசிங்கப்படுத்துறீயா என கேட்டு சண்டை போட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் பேசிக் கொள்வதில்லை எனவும் கூறி இருக்கிறார்.

Director Bala

விக்ரம் எத்தனை படங்களில் நடித்தாலும் அவருக்கு அடையாளம் கொடுத்தது சேது தான். அப்படி ஒரு படத்தை கொடுத்த பாலாவுக்கும் 25வது ஆண்டு வெற்றி விழா கொண்டாடியபோது அதில் விக்ரம் கலந்துகொள்ளாதது பலருக்கும் அப்செட் ஆக இருந்தது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விக்ரம் இப்படி நன்றி மறக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... அப்பாவுடன் சேர்ந்து பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!

Latest Videos

click me!