தொடர் வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா வில்லனாக நடித்திருந்தனர். மேலும் காளிதாஸ் ஜெயராம், மைனா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் 1 வாரம் கூட திரையரங்கில் ஓடுவது பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
120 கோடி முதல் 140 கோடி வரை செலவில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் மூன்று மடங்கு வசூல் சாதனை செய்துள்ள இந்த படம் 75 நாட்களை கடந்த போதே சுமார் 500 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது 100 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால் 550 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என திரைப்பட வட்டாரங்கள் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.