பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு படம் குறித்து மூன்று லுக்குகளும் வெளியாகி இருந்தது.