இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லவ்லின். இவர் வாரிசு நடிகையாக அறிமுகமான முதல் படமே, தோல்வி அடைந்ததால், தற்போது வரை யார் கண்ணிலும் அதிகம் படாத நடிகையாகவே உள்ளார். எனினும் அடுத்ததாக நடிக்க, மிகவும் சிறந்த கதையை தன்னுடைய அம்மா விஜி, மற்றும் பெரியம்மா சரிதாவின் துணையோடு தேர்வு செய்து வருகிறார். இவருடைய அம்மா, விஜி கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், ரஜினிக்கு தங்கையாக தில்லு முள்ளு உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அம்மா கதாநாயகியாக நடிக்க வில்லை என்பதால்... அவரின் இடத்தை இவர் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். லவ்லினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...