லவ் யூ சார்... எஸ்.பி. ஜனநாதன் திடீர் மறைவால் உருகும் விஜய்சேதுபதி, ஆர்யா, கார்த்தி...!

First Published Mar 14, 2021, 7:30 PM IST

இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் பலரையும் உலுக்கியுள்ள நிலையில், நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசி படமான லாபம் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் லவ் யூ சார் என எஸ்பி ஜனநாதனின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக ட்வீட் போட்டுள்ளார்.
undefined
நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், மக்கள் நலன், பேசப்படாத சமுதாய பிரச்னைகள், அதற்கான தீர்வு என்று தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன் அவர்கள். அவரின் பெயரை உச்சரிக்கும் போது அனைவரிடமும் பாசத்தையும் மரியாதையையும் பார்க்க முடியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சி. குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
undefined
“அவர் இறந்துவிட்டார் என்பதை உண்மையாகவே நம்ப முடியவில்லை. என் வாழ்க்கையில் சந்தித்த மிகச்சிறந்த நபர்களில் இவரும் ஒருவர். அவரது பிரிவால் மிகவும் வேதனை அடைகிறேன். எப்போதும் அவர் நம் நினைவுகளோடு இருப்பார்” என நடிகர் ஆர்யா பதிவிட்டுள்ளார்.
undefined
நடிகர் ஜெயம் ரவி, RIP ஜனா சார்... யாரும் எங்களுடைய நினைவுகளில் இருந்து உங்களை எடுக்க முடியாது என ட்வீட் செய்துள்ளார்.
undefined
நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நாம் மற்றொரு மேதையை இழந்துவிட்டோம். இயக்குநர் ஜனநாதன் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. சமூக பிரச்சனைகளில் அவரது படங்கள் என்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
undefined
பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், “எளிய மக்களின் வாழ்வை,அவர்கள் பின்னால் சுழலும் அதிகார சுரண்டலை, துணிச்சலுடன் காட்சிபடுத்தி தமிழ்த்திரையில் புது வெளிச்சம் பாய்ச்சிய “முன்னத்தி ஏர்”தோழர் திரு.SP ஜனநாதன் ஐயா அவர்களின் இறப்பு செய்தி பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் !!” என பதிவிட்டுள்ளார்.
undefined
கவிஞர் வைரமுத்து, “இயக்குநர் ஜனநாதன் இறப்புஒரு கெட்டியான துக்கம். அவருக்கு நானெழுதிய‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’ மறக்கவியலாது. செலுலாய்டு புத்தகத்தின் ஓர் இலக்கியப் பக்கம் கிழிந்துவிட்டது என்பேனா?வானவில்லில் முற்போக்குச் சிவப்பு அழிந்துபட்டது என்பேனா? வருந்துகிறேன்;இரங்குகிறேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
undefined
லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், எஸ்.பி.ஜனநாதன் சாருக்கு கடினமான இதயத்துடன் விடை கொடுக்கிறேன். உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியானது. உங்களுடைய அறிவும், கனிவான வார்த்தைகளும் என்றும் என் நினைவில் இருக்கும். உங்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!