மனிதநேயத்தின் மறுஉருவம்.! மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு விஜயகாந்த் - டி.ராஜேந்தர் இரங்கல்..!

First Published | Nov 15, 2022, 5:39 PM IST

மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவிற்கு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை 1:15 மணியளவில், காண்டினெண்டல் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

இந்நிலையில், இன்று காலை இவர் காலமானதாக வெளியான தகவல், ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரடியாகவும் சென்று, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜயகாந்த் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மன்சூர் அலிகானுக்கு அடித்த ஜாக்பாட்..! மாஸ் நடிகர் படத்தில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?
 

Tap to resize

இதுகுறித்து விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, "தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும் , நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான திரு. கிருஷ்ணா அவர்கள், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன். திரு கிருஷ்ணா அவர்கள் என் மீது அளவற்ற அன்பும் நட்பும் செலுத்தியவர். 
 

350 படங்களுக்கு மேல் நடித்துள்ள, திரு. கிருஷ்ணா அவர்கள் நல்ல மனிதர் மற்றும் மிகச்சிறந்த நடிகர். அவரது இழப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் திரு. மகேஷ் பாபு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
 

டி.ராஜேந்தர் கூறியுள்ளதாவது... " மனிதநேயத்தின் மறுஉருவம், எளிமையின் இருப்பிடம், திறமையின் பிறப்பிடம்... தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப்பறந்த மாபெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இப்படிக்கு டி ராஜேந்தர், என தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!