குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட பின்னர் நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஒரு மாத இடைவெளிக்கு பின்னர், நயன்தாரா ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அவர் நடித்துள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.