மிகவும் விறுவிறுப்பாக இவர்கள் விளையாடிவந்த நிலையில், திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். சூழ்நிலை காரணமாக வெளியேறியதாக அப்போது தெரிவித்தனர்.ஆனால் தற்போது இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏன்? வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஜெஸ்ஸி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த தகவலை அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது, இவர்கள் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.