அட கடவுளே... சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து இந்த ஹீரோவும் வெளியேறுகிறாரா? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்...

பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால் அடுத்தடுத்து விஜய் டிவி (Vijay tv) சீரியல்களில் இருந்து பிரபலங்கள் சிலர் வெளியேற உள்ளதாக வெளியாகும் தகவல் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தற்போதைய இளம் ரசிகர்களையும், இல்லத்தரசிகளும் கவரும் விதமாக சீரியல்களை ஒளிபரப்பி டி.ஆர்.பி-யில் கெத்து  காட்டி வருகிறது விஜய் டிவி.

kaatrukkenna veli

இதில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போது 'காற்றுக்கென்ன வேலி' சீரியலும் ஒன்று.


பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'.

படிக்கும் வெண்ணிலாவின் ஆசையை புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு தந்தை ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியையின் உதவியுடன் படிக்க நினைக்கிறார். இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்கள் இவை அனைத்தையும் கடந்து எப்படி கல்லூரியில் சேர்கிறாள் வெண்ணிலா, கல்லூரியில் தாளாளரான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என்பது சுவாரஸ்யமாக எடுத்து செல்கின்றனர்.

வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா  குமார் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோவாக, ஏற்கனவே அரண்மனை கிளி சீரியலில் நடித்த சூர்யா தர்ஷன் நடித்து வருகிறார்.

மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில், ஜனனி அசோக் குமார், ஸ்ரீதேவி அசோக், மானெஸ் சாவளி, மாளவிகா அவினாஷ், மதன், ஷ்யாம் சுந்தர் என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் இருந்து தற்போது நாயகன் தர்ஷன் வெளியேற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் தற்போது வரை சீரியல் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

ஏற்க்கனவே பாண்டியன் ஸ்டார் சீரியலில் இருந்து காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்ணி ஆகியோர் வெளியேற உள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், தற்போது தர்ஷனும் வெளியேற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Latest Videos

click me!