அல்டரா மாடர்ன் உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வேற லெவல் போட்டோஸ்..!

Published : Oct 22, 2021, 06:54 PM IST

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) விதவிதமான அல்டரா  மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
அல்டரா  மாடர்ன் உடையில்... இளம் ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வேற லெவல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் வெளியான "காக்கா முட்டை" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்கிற பெயரையும் பெற்று தந்தது.

28

எனவே தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 

38

4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்று இல்லாமல் இவர் தனித்துவமான பாணியை கையாளுவது தான் மறைமுகமாக இவரது வளர்ச்சிக்கு காரணம்.

 

48

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

 
58

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார்.

 
68

இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ஓடிடியில் வெளியான 'திட்டம் இரண்டு' திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
 

78

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமரையும் கையில் எடுத்துள்ளார்.
 

88

எனினும் அவ்வப்போது, இளம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக... அல்டரா  மாடர்ன் உடையில் அசரவைக்கும் இவரது புகைப்படங்களுக்கு வேற லெவல் லைக்குகள் குவிந்து வருகிறது.

 

click me!

Recommended Stories