ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; நடிகையுடன் காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ!

Published : Feb 07, 2025, 08:30 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெளன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்த சல்மானுல் தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

PREV
14
ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; நடிகையுடன் காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ!
காதலை அறிவித்த ரீல் ஜோடி

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே மெட்டி ஒலி நாடகத்தில் நடித்த சேத்தன் - தேவதர்ஷினி, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா மானசா - சஞ்சீவ், திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஸ்ரேயா, விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்களான வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஆகியோர் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர்கள் தான் சல்மானுல் - மேகா மகேஷ் ஜோடி.

24
சீரியல் ஜோடி

இவர்கள் இருவரும் மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்கிற தொடரில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சீரியலில் நடித்தபோது சல்மானுல் உடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாகவும் மாறியது. மேலும் சீரியலிலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் அவர்கள் நடித்த காதல் காட்சிகளுக்கு கேரள ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... சோலி முடிஞ்சது; பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கிய விடாமுயற்சி - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

34
சல்மானுல் - மேகா மகேஷ் காதல்

சல்மானுல் ஃபரிஸ் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். அந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆடுகளம் சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சல்மானுல் நேற்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மேகா மகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்திருக்கிறார்.

44
சல்மானுல் இன்ஸ்டா பதிவு

அந்த பதிவில், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சஞ்சு முதல் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ஆகி உள்ளோம். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை, ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். சல்மானுலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் ஜோடி பொறுத்தம் சூப்பராக இருப்பதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கேரவனில் அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா வேதனை!

Read more Photos on
click me!

Recommended Stories