சோலி முடிஞ்சது; பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கிய விடாமுயற்சி - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

Published : Feb 07, 2025, 07:39 AM IST

Vidaamuyarchi Box Office Collection : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

PREV
15
சோலி முடிஞ்சது; பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கிய விடாமுயற்சி - முதல் நாள் வசூல் இவ்ளோதானா?
விடாமுயற்சி டீம்

நடிகர் அஜித் குமாரும், இயக்குனர் மகிழ் திருமேனியும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றி இருக்கிறார்.

25
1000 திரைகளில் விடாமுயற்சி

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி இருந்தது. அப்படம் ரிலீஸ் ஆகி சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்தது. இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை ஹாலிவுட் பாணியில் ஸ்டைலிஷாக உருவாக்கி இருந்தனர். இப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரைகளுக்கு மேல் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... 'விடாமுயற்சி' பார்க்கச் சென்ற அனிருத்துக்கு ரூ.1000 அபராதம்! நடந்தது என்ன?

35
விடாமுயற்சி ரிசல்ட்

மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ திரையிடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் அஜித்தை திரையில் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் தியேட்டரில் ஆடிப் பாடி அதகளம் செய்தனர். ஆனால் படத்தின் ரிசல்ட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி இல்லை. ரசிகர் எதிர்பார்த்த மாஸ் ஓப்பனிங் சீன் எதுவுமின்றி ஒரு ஆரவாரம் இல்லாத ஆக்‌ஷன் படமாக விடாமுயற்சி ரிலீஸ் ஆகி இருக்கிறது.

45
விடாமுயற்சி வசூல்

விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்த இப்படம் வசூலிலாவது தூள் கிளப்பி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாம். அதிலும் தமிழ்நாட்டில் ரூ.21.5 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கூட முதல் நாளில் ரூ.23 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை கூட விடாமுயற்சியால் எட்ட முடியவில்லை.

55
வசூல் கம்மியானது ஏன்?

அதுமட்டுமின்றி உலகளவில் இப்படம் ரூ.30 முதல் ரூ.35 கோடி வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் கம்மியானதற்கு காரணம், அப்படம் விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகாதது தான். அதேபோல் இப்படத்திற்கு பெரியளவில் புரமோஷனும் செய்யப்படவில்லை. இதன் எஃபெக்ட் வசூலிலும் எதிரொலித்துள்ளது. விஜய், ரஜினி போன்ற நட்சத்திரங்களில் படங்கள் முதல் நாளே 100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டி வரும் சூழலில் அஜித் படம் 50 கோடி கூட வசூலிக்காதது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்... கணவர் அஜித்தின் 'விடாமுயற்சி'; FDFS ஷோ பார்த்த ஷாலினி! வைரலாகும் புகைப்படம்!

click me!

Recommended Stories