விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் இன்றி, இளம் ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
காதலியையும் விட்டு கொடுக்க மனம் இல்லை... அம்மாவிற்காக திருமணம் செய்து கொண்ட முத்தழகையும் பிரிய மனம் இன்றி தவித்து வரும் நாயகன் யாருடன் சேர்ந்து வாழ்வார் ? என்கிற மிகப்பெரும் கேள்விக்கு மத்தியில் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஆஷிஷ்.. அண்மையில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியுடன்... விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.