வெள்ளை நிற புடவையில் கியூட்டாக போஸ் கொடுத்தபடி நடிகை கீர்த்தி சுரேஷ் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
25
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி, அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சைரன் என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ரகு தாத்தா என்கிற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இதேபோல் தெலுங்கிலும் படு பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் போலாஷங்கர் என்கிற படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி, அதேபோல் தசரா எனும் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
45
இவ்வாறு தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், உடல் எடையை குறைத்த பின்னர், போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
55
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது வெள்ளை நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.