இப்பாடலை வைஷாக் என்பவருடன் இணைந்து மஞ்சு வாரியரும் பாடி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. மஞ்சு வாரியர் பாடியுள்ள முதல் தமிழ் பாடல் என்பதால், இது எப்படி இருக்கும் என ஆவலோடு கேட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாடல் முழுக்க வைஷாக்கின் குரல் மட்டுமே நிரம்பி இருந்தது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள், இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... உங்க வாய்ஸ எங்க? என மஞ்சு வாரியரை மீம் போட்டு கலாய்க்க தொடங்கினர்.