ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீசான அவதார் திரைப்படம் உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. கர்ப்பனையின் உச்சமாக பார்க்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசானது. முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்தது.