90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், கடந்த 2002-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ரோஜா, அரசியலில் களமிறங்கினார்.
25
முதலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சியில் இருந்த இவர், பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அக்கட்சி சார்பில் 2 முறை தேர்தலில் களமிறங்கி வெற்றிகண்டு எம்.எல்.ஏ ஆனார். தற்போது ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரோஜாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.
அதன்படி தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்து வருகிறார். இவர் அரசு சார்பில் நடத்தப்படும் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக செல்வது உண்டு. அப்படி கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றால் அங்குள்ள வீரர்களுடன் களத்தில் இறங்கி கபடி விளையாடுவது.
45
ஏதேனும் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சென்றால் அங்குள்ளவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது என மக்களோடு மக்களாக பழகி வரும் ரோஜா, சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார்.
55
அப்போது சட்டென கிளவுஸை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி ஜாலியாக பாக்ஸிங் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.