குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளை தாண்டி சிறியவர்கள் மற்றும் இளைஞர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுவது, இந்த சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.