Sai Pallavi : அந்த ஒரு காரணத்துக்காக விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த சாய் பல்லவி...!

Published : Feb 24, 2023, 03:15 PM IST

நடிகை சாய் பல்லவி, விஜய், அஜித் படங்களில் ஹீரோயினாக நடிக்க மறுத்த தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

PREV
15
Sai Pallavi : அந்த ஒரு காரணத்துக்காக விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த சாய் பல்லவி...!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் மலர் என்கிற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, தன் யதார்த்த நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தாலும், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கு தான் அதிகளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.

25

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தியா என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி. அடுத்தடுத்து தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் பிளாப் ஆனதால், டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி.

35

இவர் நடிப்பில் கடைசியாக கார்கி என்கிற திரைப்படம் வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்நிலையில், நடிகை சாய் பல்லவி, விஜய், அஜித் படங்களில் ஹீரோயினாக நடிக்க மறுத்த தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா உடன்... விடுதலை டிரைலர் ரிலீஸுக்கு நாள் குறித்த வெற்றிமாறன்

45

அதன்படி விஜய் நடிப்பில் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் அணுகினார்களாம். ஆனால் அவரோ, தனது கேரக்டருக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் ராஷ்மிகாவை அந்த ரோலில் நடிக்க வைத்துள்ளனர். வாரிசு படத்தில் தனக்கு ஸ்கோப் இல்லாவிட்டாலும் விஜய்யுடன் நடிப்பதற்காக அப்படத்தில் கமிட் ஆனதாக ராஷ்மிகாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

55

அதேபோல் எ.வினோத் - அஜித் கூட்டணியில் கடந்தாண்டு ரிலீசான வலிமை படத்திலும் சாய் பல்லவியை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். அதிலும் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இல்லாததால் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம் சாய்பல்லவி. முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் சாய் பல்லவியின் முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர் அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முதல் நீ முடிவும் நீ... ஸ்ரீதேவி உடன் எடுத்த முதல் மற்றும் கடைசி போட்டோக்களை பகிர்ந்து கண்கலங்கிய போனி கபூர்

Read more Photos on
click me!

Recommended Stories