ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி... அவருடனான மனஸ்தாபம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய ரஜினி

Published : Feb 24, 2023, 01:56 PM ISTUpdated : Feb 24, 2023, 02:00 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழகு, கம்பீரம், அறிவு, ஆளுமை மற்றும் துணிச்சல் மிகுந்தவர் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.

PREV
14
ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி... அவருடனான மனஸ்தாபம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய ரஜினி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடனான நினைவுகளை பகிர்ந்து ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவருடனான மனஸ்தாபம் குறித்தும் மனம்திறந்துள்ளார்.

24

இதுகுறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளதாவது : “மதிப்பிற்குரிய அமரர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளில் அவர் இப்போது நம்முடன் இல்லையே என்கிற வருத்ததுடன் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதா போல் இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவர் அழகு, கம்பீரம், அறிவு, ஆளுமை மற்றும் துணிச்சல் மிகுந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது, மிகமிக பெரிய திறமைவாய்ந்த தலைவர்கள் இருக்கும்போது, ஒரு தனிப் பெண்மணி அந்த பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கியது சாதாரண விஷயம் இல்லை.

இதையும் படியுங்கள்... தங்கலான் படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கிய விக்ரம்... அதுவும் இத்தனை கோடியா..!

34

அதன்பின் அந்த கட்சியை பலப்படுத்தி, இன்னும் பெரிய கட்சியாக உயர்த்தி, பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டவர் ஜெயலலிதா. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை அவ்வளவு மதித்தார்கள். அவரின் திறமையை பார்த்து பிரம்மித்துப் போனார்கள். ஒரு காலகட்டத்தில் எனக்கும அவருக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது.

44

அந்த சமயத்தில் அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுக்கு அப்புறம் என்னுடைய மகள் கல்யாணத்துக்கு அவரை அழைக்க செல்லும்போது, அதை எல்லாத்தையும் மறந்து, என் பொண்ணு கல்யாணத்துக்கு வந்து கல்யாணத்தை நடத்தி கொடுத்தார். அவ்ளோ பெரிய கருணை உள்ளம் அவருக்கு” என அந்த வீடியோவில் நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார் ரஜினிகாந்த்.

இதையும் படியுங்கள்... முதல் நீ முடிவும் நீ... ஸ்ரீதேவி உடன் எடுத்த முதல் மற்றும் கடைசி போட்டோக்களை பகிர்ந்து கண்கலங்கிய போனி கபூர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories