இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி, விஷாலுக்கு ஜோடியாக தோரணை, ஜீவாவுக்கு ஜோடியாக ரௌத்திரம், விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.