தங்கலான் படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கிய விக்ரம்... அதுவும் இத்தனை கோடியா..!

Published : Feb 24, 2023, 01:11 PM ISTUpdated : Feb 24, 2023, 01:12 PM IST

தங்கலான் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் நடிகர் சியான் விக்ரம் அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
தங்கலான் படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கிய விக்ரம்... அதுவும் இத்தனை கோடியா..!

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப வீரம் நிறைந்த ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விக்ரம். அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் விக்ரம் கமிட் ஆன திரைப்படம் தங்கலான்.

24

இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி வருகிறார். இது கே.ஜி.எஃப் கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம். இதில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார். அதேபோல் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பிரிட்டிஷ் நடிகர் டேன் கால்டாகிரானும் இப்படத்தில் வில்லனாக நடித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... முதல் நீ முடிவும் நீ... ஸ்ரீதேவி உடன் எடுத்த முதல் மற்றும் கடைசி போட்டோக்களை பகிர்ந்து கண்கலங்கிய போனி கபூர்

34

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்கவயலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நிறைய தாடி உடன் வித்தியாசமான கெட் அப்பில் நடித்து வருகிறார் விக்ரம். தங்கலான் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

44

இந்நிலையில், தங்கலான் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் நடிகர் சியான் விக்ரமின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ,28 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விக்ரம் தனது கெரியரில் அதிக சம்பளம் வாங்கி உள்ளது இந்த படத்திற்காக தான் என கூறப்படுகிறது. தங்கலான் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து இப்படத்தை இந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... 3 ஹீரோயின்... ஒரு ஐட்டம் சாங் வேற..! கைதி ரீமேக்கை படாதபாடு படுத்தும் பாலிவுட்

Read more Photos on
click me!

Recommended Stories