தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கைதி. கார்த்தி நாயகனாக நடித்திருந்த இப்படம் நடிகர் விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஹீரோயினும் கிடையாது, பாடலும் கிடையாது. இவை இரண்டு இன்றி படத்தை விறுவிறுப்பாக இயக்கி வெற்றி கண்டார் லோகேஷ்.
கைதி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அதனை ரீமேக் செய்ய பல்வேறு திரையுலகினர் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கைதி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியதோடு, அப்படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவித்தார். அந்த வகையில் கைதி படத்தின் இந்தி ரீமேக்கிற்கு போலா என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி
கைதி இந்தி ரீமேக்கான போலா படம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஹீரோயினே இல்லாமல் லோகேஷ் எடுத்த கைதி படத்தை, மூன்று ஹீரோயின்களை வைத்து எடுத்துள்ளார் அஜய் தேவ்கன். அப்படத்தில் அமலா பால், தபு மற்றும் ராய் லட்சுமி ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதில் அமலா பால், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதேபோல் கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நரேன் கதாபாத்திரத்தை இந்தியில் நடிகை தபு நடித்து இருக்கிறார். இது போதாதென்று தற்போது புதுவரவாக இப்படத்தில் ஐட்டம் சாங் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் நடிகை ராய் லட்சுமி கவர்ச்சி நடனம் ஆடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரீமேக் என்கிற பெயரில் கைதி படத்தை பாலிவுட்டில் படாத பாடு படுத்தி வருவதை பார்த்த தமிழ் ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 5 வருட காத்திருப்புக்கு பின் பிறந்த முதல் குழந்தை... பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவுக்கு குவியும் வாழ்த்து