நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசான திரைப்படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். சித்தாரா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்திருந்த இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டது. இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீஸ் ஆனது.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் உடன் கென் கருணாஸ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி இப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.51 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... 5 வருட காத்திருப்புக்கு பின் பிறந்த முதல் குழந்தை... பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவுக்கு குவியும் வாழ்த்து
வாத்தி படம் தமிழை விட தெலுங்கில் தான் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டும், இங்கு ரூ.22 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டைவிட தெலுங்கு மாநிலங்களில் குறைவான அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படம் அங்கு ரூ.21 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ.14 கோடி வசூலித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி தெலுங்கில் வாத்தி படம் மூலம் அதிகளவிலான ஷேர் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் முதல் வார இறுதியில் ரூ.12 கோடி ஷேர் கொடுத்துள்ளதாகவும், இது தனுஷின் முந்தைய படங்களைவிட 4 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் வெளியானபோது மொத்தமே ரூ.12 கோடி ஷேர் தான் கிடைத்திருந்ததாகவும், தற்போது வாத்தி படத்துக்கு ஒரே வாரத்தில் அந்த ஷேர் தொகை கிடைத்துள்ளதால், மிகுந்த உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி ஒன்றையும் கொடுத்துள்ளாராம்.
இதையும் படியுங்கள்... லியோவுக்கு போட்டியாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த அஜித்... லீக்கானது ஏகே 62 படத்தின் டைட்டில்?